Pages

Thursday, 10 November 2011

ஈரத்தாலாட்டு.....

வீரம் சொரிந்த தாலாட்டுப் பாடிவந்த என் மறத்தமிழ் தாயொருத்தி இன்று தன் பிள்ளைக்கு சொல்லும் ஈரம் சொரிந்த தாலாட்டு....



கடல் மடியில பொறந்ததால
காலன் வந்து காத்துருக்கான்
கண்மணி நீ கண்ணுறங்கு

வல வீச போன தகப்பன்
வந்து சேர வேண்டுமுன்னு
பிஞ்சு வெரல் நீயும் தூக்கி
வெத்துக் கல்லு சாமிகிட்ட
வேண்டிக்காம நீயும் தூங்கு...

கச்சத் தீவு பக்கம் போனா
கழுத்தறுப்பான் சிங்களவன்
எட்டி நின்னு பாத்துபுட்டு
ஏங்கிப் போய் வந்திரணும்....
நம்ம வீட்ட பங்கு போட்டு
நாதியத்து போனோமடா...
நாளை மட்டும் விடிஞ்சுடுமா..
நல்ல புள்ளயா நீ தூங்கு...

நமக்குனு இருந்த தீவ
தாரை வாத்துக் குடுக்கையில
எங்க தாலியையும் குடுத்துட்டாக...
கொடுத்தவன் கேட்டா
எடுத்தவன் குடுப்பானா?
ஒடம்பொறந்தான் சாகையில
ஒதுங்கி நின்ன கூட்டமடா..
நம்ம ஒத்த உசுரு போகயில
ஒடி வந்து உதவிடுமா...
பகல் கனவு பலிக்காது..
என் பத்திரமாத்து தங்கமே
கண்ணுறங்கு...

எத்தன தடவ குடிச்சாழும்
தமிழ் மறவன்
ரத்தம் மட்டும் தெகட்டாது,,,,
அத்தனயும் செஞ்சு புட்டு
அலை அலையா சிரிக்காளே
அந்த கடல் சிறுக்கி பேச்ச மட்டும் 
எப்போதும் கேக்காதே..
என் மவனே கண்ணுறங்கு....

No comments:

Post a Comment