மனம் என்னும்
வீட்டில்.....
வன்மமும்
விசனமும் வாசலில்
விளையாடிக்
கொண்டிருக்கலாம்
இச்சைகள்
கயிற்றுகட்டில் அமர்ந்து
காலாட்டிக்
கொண்டிருக்கலாம்
அறிவென்னும்
அரிதாரம் பூசி
ஆளுயர
அசிங்கங்கள்
அலைந்து
கொண்டிருக்கலாம்
..
சற்று உள் சென்று
பாருங்கள்
முழங்காலில்
முகம் புதைத்து
மூலை ஒன்றில்
இடம் பிடித்து
வாய்ப்பு வரும்
வேளை பார்த்து
வந்தேறிகளால்
வாழ்விழந்த
மனிதம் அங்கே
அமர்ந்திருக்கும்..
No comments:
Post a Comment