கண்ணகி தேசத்தில் ஓர் நாள்
கதிரவன் இளைப்பாரச் சென்றதால்
எங்கும் இருள் மயம்
அதிரங்கள் அதிர நடக்கின்றாள் அவள்
வழிகின்றன வியர்வை மணம்
சாலையின் குப்பை மணம்
ஆள்பவரின் ஆசியுடன்
தெருவெங்கும் சாராய மணம்
வெறிக்கின்ற இருளின் கண்கள்
அத்தனையும் கடந்தாக வேண்டும்
அரை மணித்துளியில்
உடலைக் காப்பது உடன் பிறந்த
ஓர் ஆதி உணர்வு
பெண்ணாய் பிறந்தால் அது பீதியுணர்வு
குறிகளுக்கு அஞ்சியே நகர்கின்றன அவள் நொடிகள்
தெருவின் திருப்பங்களில்
அவள் வாழ்வின் திருப்பங்கள் ஒளிந்திருக்கலாம்
பேருந்தில் உரசியவன் நாற்றம்
கழுத்தோரம் எரிகிறது
இதோ வீடு
பாதுகாப்பின் கூடு
நுழைந்ததும் வருகிறது மூச்சு
சிறுநீரின் அழுத்தலோடு
கழிக்கையில் இன்றும் தோன்றுகிறது
"கண்ணகியாம்
கற்பாம்
மயிராம்
குறியின்றி பிறந்திருக்கலாம் நான்."
ஒரு கோடி கவிஞர்கள் ,ஓராயிரம் முறை எழுதி தீர்த்த பின்னும் தீராத கவிதையின் பெருவெளியில் சிறு துகளாக......
Tuesday, 18 September 2018
குறியின்றி பிறந்திருக்கலாம் நான்
Subscribe to:
Posts (Atom)