நான் யார் ?
ஆதிக்கவெறி கொண்ட மிருகமா நீ ?
ஆச்சார வெறி கொண்ட அடிமையா நீ ?
திராவிடனா ?
ஆரியனா ?
ஒடுக்கியவனா ?
ஒடுங்கியவனா ?
எவனடா நீ ? என்போரே ,கேளும்
மயக்கத்தின் விளிம்பில் நிற்கும் நான்
உளறினால் கவிஞன்
கிறுக்கினால் ஓவியன்
கத்தினால் பாடகன்
பொய் சொன்னால் இலக்கியவாதி
மெய் சொன்னால் குடிகாரன்
மயக்கம் தெளிந்தால் சம்சாரி
எம் அடையாளம் யாம் அடையவிரும்புவது
நீர் அளிப்பதென்று.